பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவது சிறந்த அரசியல் தீர்வாக அமையும் ; சேஹான் சேமசிங்க

237 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பொதுஜன பெரமுன பரந்துப்பட்ட  கூட்டணியமைப்பதற்கான  பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுப்பத பயனற்றது. சுதந்திர கட்சியின்  அரசியல் நோக்கம் யாதென்பது  வரவு – செலவு திட்டத்தின் ஊடாக தெளிவுப்படுத்தப்பட்டு விட்டது . 

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பொதுஜன  பெரமுன தனித்து வெற்றிப் பெற்றதை போன்று தனித்து செயற்படுவதே சிறந்த அரசியல் தீர்மானமாக அமையும் என பாராளுமன்ற  உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

  வரவு – செலவு திட்டம் வெற்றிப் பெற்றமை சுதந்திர கட்சி  வாக்கெடுப்பினை புறக்கணித்தமை தொடர்பில் வினவிய போது  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 வரவு – செலவு திட்டம் விடயத்தில் சுதந்திர  கட்சியின் ஒத்துழைப்பு எவ்விதமானது மற்றும் அவர்களின் அரசியல்  நோக்கம்  என்ன என்பது தெளிவாக புரிந்து விட்டது. 

இடம் பெறவுள்ள தேர்தல்களில் இவர்கள் எம்முடன் இணக்காக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  பொதுஜன பெரமுன எவ்வாறு தனித்து போட்டியிட்டு வெற்றிப் பெற்றதோ அதே போன்று   தனித்து போட்டியிடுவதே சிறந்த அரசியல் தீர்வாக அமையும்.  சுதந்திர கட்சியின்  மீது நம்பிக்கை இல்லாமல் போலியான போச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பயனற்றது. என்றார்.