சிரிய நாட்டவர் ஜேமன் காவல்துறையினரால் கைது

345 0

i3ஜேமனியில் ஜிஹாட் சார்பாக குண்டு வைக்க திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேமன் காவல்துறையினர் சிரியாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவர் அகதியாக ஜேமனின்கு வந்த இவர் கிழக்கு நகரான லீப்சிக்கில் உள்ள தொடர்மாடி தொகுதியில் தங்கியிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தங்கியிருந்த இருப்பிடத்தில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பாரிஸ் மற்றும் பிரசல்சில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் இவரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தவிர, மேலும் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேமன் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, சிரியாவில் இடம்பெற்று வரும் வன்செயல் காரணமாக கடந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான சிரிய மக்கள் சட்டவிரோதமாக ஜேமனுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், சிரியாவைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை ஜேமன் மக்களுக்கு அதிர்ப்தி ஏற்பட்டுள்ளதாக ஜேமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேமன் சான்சலர் அஞ்சிலா மேக்கல் அதிக எண்ணிக்கையிலான சிரிய அகதிகளை நாட்டிற்குள் அனுமதித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.