நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரட்சியமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 7 ஆயிரத்து 478 ஆக உயரடைந்துள்ளது.
பொலநறுவை, அநுராதபுரம், அம்பாறை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றுள் பொலநறுவை மாவட்டமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தமக்கு விரைவாக குடிநீரை வழங்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக திஸ்ச – கதிர்காமம் பாதையில் இன்று மாலை வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
வரட்சி காரணமாக மக்களுக்கு மாத்திரமல்லாது விலங்குகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
யால, வில்பத்து போன்ற சரணாலயங்களின் நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.