20வது அரசியலமைப்பு திருத்தம் குறித்த இறுதி தீர்மானம் மே மாதம்-ரில்வின் சில்வா

246 0

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானம் மே மாதம் மேற்கொள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு செயல்படவில்லை என்றால், பொது அமைப்பாக இணைந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய வேட்பாளரை முன்னிறுத்த உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

அநுராதபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.