ஜனாதிபதியை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருப்பதே எமது கடமை- தயாசிறி

219 0

பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி அமைப்பதை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருக்கடிக்குள்ளாக்காமலிருப்பதே எமது கடமை. அதனையே நாம் செய்துள்ளோம். எனவே இது குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்றார். 

 பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி அமைப்பதில் பாதிப்பை ஏற்படுத்துமா , இல்லையா என்பது பற்றி இப்போது தெளிவாகக் கூற முடியாது. எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அந்த கலந்துரையாடலின் பின்னரே உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவிக்க முடியாது.

எனினும் பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி அமைப்பதை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருக்கடிக்குள்ளாக்காமலிருப்பதே எமது கடமை. அதனையே நாம் செய்துள்ளோம். எனவே இது குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்றார். 

2019 ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கலந்து கொள்ளாமைக்கான காரணம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிரானது என்பதற்காக சிலர் கூறுவதைப் போன்று வரவு – செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க முடியாது. காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பின் கீழுள்ள நான்கு பிரதான அமைச்சுக்களுக்கும் இதில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் வாக்குகளை எதிராக பிரயோகிக்கும் போது அது ஜனாதிபதியையும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கும். அவ்வாறான செயலில் நாம் ஒருபோதும் ஈடுபடமாட்டோம். 

வாக்களித்து பயனில்லை என்பதற்காகவும், ஜனாதிபதியுடைய நிதி ஒதுக்கீடுகளை கருத்திக் கொண்டும் தான் நாம் வாக்களிப்பை புறக்கணித்தோம். அதற்காக ஐக்கிய தேசிய கட்சியை சுதந்திர கட்சி ஆதரிப்பதாக ஒரு போதும் கருதிவிட முடியாது. தற்போது அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் அதனைச் செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்பதில் மாற்றம் இல்லை என்றார்.