பிரியங்கா எனக்கு மிகச்சிறந்த தோழி- ராகுல் காந்தி

382 0

பிரியங்கா தனக்கு சகோதரி மட்டும் அல்ல. மிகச்சிறந்த தோழியாகவும் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் புனே நகரில் மாணவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது பிரியங்கா பற்றிய கேள்விக்கு அவர் பல்வேறு ருசிகர தகவல்களை வெளியிட்டு பதில் அளித்தார். ராகுல் கூறியதாவது:-

எனது குடும்பம் பயங்கரவாத வன்முறையால் மிகக் கடுமையாக பல முறை பாதிக்கப்பட்டுள்ளது. எனது பாட்டி இந்திராகாந்தியும், தந்தை ராஜீவ்காந்தியும் பயங்கரவாதத்துக்கு பலியானார்கள்.

சிறு வயதில் இருந்தே நானும் பிரியங்காவும் அன்பாக பழகி வருகிறோம். சிறு வயதில் எங்களுக்குள் சண்டை வந்தது உண்டு. ஆனால் இப்போது இல்லை.

பிரியங்கா எனக்கு சகோதரி மட்டும் அல்ல. மிகச்சிறந்த தோழியாகவும் இருக்கிறார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளோம். எனவே எங்களுக்குள் மிக கடுமையான வாக்குவாதம் வந்ததே இல்லை.

நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலை உருவானால் கொஞ்ச நேரத்திலேயே ஒன்று நான் விட்டுக் கொடுத்து விடுவேன். அல்லது பிரியங்கா விட்டுக் கொடுத்து விடுவார்.

எனக்கும் பிரியங்காவுக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால் நல்ல சேவையை இணைந்து வழங்குவோம். நாங்கள் ஒன்றிணைந்து பணிபுரிவோம்.

ரக்‌ஷா பந்தன் நேரத்தில் பிரியங்கா எனக்கு ராக்கி கட்ட தவறுவது இல்லை. அந்த ராக்கி கயிறு தானாக அறுந்து விழும் வரை நான் கையில் கட்டி இருப்பேன். இவ்வாறு ராகுல் கூறினார்.