பண்டாரகம பிரதேச சபையின் நேற்றைய (05) சபை அமர்வின் போது, ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அமளிதுமளி ஏற்பட்டது.
சபைக்குக் சொந்தமான பொதுச்சந்தை கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்ட காலகட்டத்தில், அந்தக் காணியில் வாழ்ந்த
குடும்பத்துக்கு, கடையொன்றை வழங்குவது தொடர்பிலான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டதையடுத்து, அதை, சபை தவிசாளர் நிராகரித்தமையால், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.