பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு கண் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல வைத்தியசாலைகளின் தாதியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு நோயாளிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.