இலங்கைக்கான ஜெர்மன் உயர்ஸ்தானிகர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கிளிநொச்சி ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு அவரும், ஜெர்மன் நாட்டு முதலீட்டு நிறுவன பிரதிநிதிகளும் சென்றிருந்தனர்.
குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகள் என்ன? அங்கு எவ்வாறான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன? அங்கு எவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு முதலீடுகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த தொழிற் பயிற்சி நிறுவனத்தின் கட்டட அமைவிடங்கள் கற்கை நிலையங்கள், என்பவற்றை குறித்த குழுவினர் பார்வையிட்டதுடன் மாணவர்களிடமும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இருப்பிட வசதிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டனர்.