சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 25ம் திகதி

453 0

போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு இன்று 04ம் திகதிக்கு விசாரணைக்கு வந்தது. 

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இன்றைய வழக்கு விசாரணையின் போது மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா உட்பட இரண்டு சாட்சியாளர்களிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

அரசதரப்பு பிரதி செலிசிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அடுத்த விசாரணை தினத்தின் போது முறைப்பாட்டாளரிடம் சாட்சியம் பதிவு செய்ய எதிர்பார்த்து உள்ளதாக கூறினார். 

அதன்படி வழக்கை எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் அரச கையெழுத்து பரிசோதகரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார். 

கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி சசி வீரவன்சவுக்கு எதிராக குற்றப்புலளாய்வுத் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.