இந்திய எல்லைக்குள் உளவு பார்த்த பாகிஸ்தான் ஆள் இல்லாத விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

345 0

பாகிஸ்தான் ஆள் இல்லாத விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலம் தர்ன்தாரன் பகுதியில் இந்திய எல்லைப்படை சுட்டு வீழ்த்தியது.

பாகிஸ்தானின் ஆள் இல்லாத விமானம் ஒன்றை இந்திய எல்லைப்படையினர். பாஞ்சாப் மாநிலம், தர்ன்தாரன்  மாவட்டம்  கெம்கரண் பகுதியில் சுட்டு வீழ்த்தினர். இந்த ஆள் இல்லாத  விமானம் ரோதக்  கிராமத்தில் கண்டறியப்பட்டது.  உடனடியாக எல்லை பாதுகாப்பு படையினர் விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் அதனை சுட்டு வீழ்த்தினர்.

இருப்பினும், அந்த ஆள் இல்லாத விமானம்  இந்திய எல்லைக்குள் அல்லது பாகிஸ்தான் எல்லைக்குள்  விழுந்ததா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பஞ்சாயத்து தலைவர் லக்பீர்சிங்,  துப்பாக்கி சூடு நடத்திய பிறகு விமானத்தை கண்டதாக கூறி உள்ளார்.
மாவட்ட நிர்வாகம் இணைய சேவையை இடைநிறுத்தியது மற்றும் கிராமத்தில்  மின்சார சேவையை  துண்டித்தத்து. இன்று காலை சேவைகள் மீண்டும் தொடங்கின.


முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு, இந்திய விமானப்படை (IAF) சுக்யாய் -30 மற்றும் மிரேஜ் 2000 போர் விமானங்கள் ஆகியவற்றை பஞ்சாப் எல்லையில் நெருங்கிய நான்கு பாகிஸ்தானிய F-16 விமானங்களைத் துரத்தியது.


பாகிஸ்தானிய போர் விமானங்கள் கண்காணிப்பு  விமானத்தை அனுப்பி இருக்கலாம். எல்லைப் பகுதிகளில் இந்தியத் துருப்புக்களை நிறுத்துவதைக் கண்டறிவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என் கூறப்படுகிறது.