இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும் என்று பாகிஸ்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் எழுந்துள்ள பதற்றமும் முழுமையாக தணியும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாஹித் உசேன் சையத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வோஷிங்டனில் நேற்று பாகிஸ்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாஹித் உசேனும், ஷெஸ்ரா மன்சாபும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் நிச்சயம் பங்கேற்க வேண்டும். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவர் என்ற அடிப்படையில் அவர் நெளிவு சுழிவுடன் செயல்படுவார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.