‘எழுந்து நிற்போம்’ என்னும் தொனி பொருளில் வீதி விபத்துக்களுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகள், அரச நிறுவனங்களில் நடைபெற்றது.
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வீதி விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுக்குள் கொண்டுவரக்கோரி இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
மேலும் ஜோன் பொஸ்கோ மற்றும் யாழ்ப்பாண இந்து ஆரம்ப பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை ஆகியவற்றிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.