அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இருவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர ஆகியோரின் விளக்கமறியல் காலமே நீடிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 24ஆம் திகதி வரை இவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை, கோட்டை நீதிமன்ற நீதிவான் இன்று வழங்கினார்.