உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள இரசாயனம் தொடர்பில் அறிவுறுத்தல்

265 0

காய்கறி, பழவகை மற்றும் தேங்காய் எண்ணெயில் அடங்கியுள்ள கூறுகள் மற்றும் இரசாயன பயன்பாடு தொடர்பில் மேற்கொள்ளபட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளது. 

இதற்கமைவாக இது தொடர்பாக தகவல்களை பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பொது மக்கள் உணவு வகைகளை பயன்படுத்தும் பொழுது பொருத்தமான மற்றும் பொருத்தமற்றவை தொடர்பில் பரிசோதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் கம்லத் தெரிவித்துள்ளார். 

நச்சுத் தன்மையற்ற உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் மூலம் கிடைக்கபெறும் பெறுபேறுகள் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மற்றும் பொது மக்களை தெளிவுப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கபபட்டுள்ளது.