‘அனைவருக்கும் நிழல்’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் குடியிருப்புகளுக்கு சமூகக் குடியிருப்பு எனப் பெயரிட்டு துணை கிராமங்களிலும் இத்திட்டத்தின் மூலம் வீடமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முறையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்டம் பிரதேசம் மற்றும் விவசாய வீட்டுக்குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதுவரையில் 11,192 பிரிவுகளில் விவசாய வீடமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் அடைவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நோக்கத்தை பயனுள்ள வகையில் நிறைவேற்றுவதற்காக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திற்கு அப்பால் துணை கிராம மட்டத்தில் விவசாய வீடமைப்பக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.