முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவும், காவல்துறையின் முன்னாள் அதிபர் மஹிந்த பாலசூரியவும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
தாம் முன்பு வகித்த மலைநாட்டு அபிவிருத்தி சபையின் தலைவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே பெசில் ராஜபக்ச, ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் சகிதம் காவல்துறையினரின் பாதுகாப்பை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க மஹிந்த பாலசூரியவும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.