எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் விஷேட பஸ் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரையில் இந்த சேவை நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் நேர அட்டவணை முகாமையாளர் சஜிவ டிலுக்ஷ தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மேலதிகமாக 1487 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கொழும்பு, ஹட்டன், கண்டி, அம்பாறை, மற்றம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி இந்த பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலும் இந்த காலப்பகுதியில் விஷேட பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.