இலத்திரனியல் ஊடகங்கள், ஊடக ஒழுக்கங்களை அவமதிக்கக்கூடாது என்றுக்கோரி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது
அரசாங்க தகவல் திணைக்கள் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய இந்த அறிவுறுத்தல் அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்
இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் செய்தி ஒன்றை கடந்த சனிக்கிழமையன்று பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
குறித்த இளைஞர் தொடரூந்து பாதைக்கு வந்தது முதல் அவர் தொடரூந்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொள்வது வரையிலான படங்களை இலத்திரனியல் ஊடகங்கள் ஒளிபரப்பாக்கியிருந்தன.
இது முழுமையாக ஊடக ஒழுக்கத்தை அவமதிக்கும் செயல் என்று ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக ஒழுங்கின் அடிப்படையில் இவ்வாறான செய்திகளை ஒலி, ஒளிபரப்பட முடியாது.
இந்த காணொளி காட்சியின் மூலம் குறித்த இளைஞரின் குடும்பத்தினரும் சிறுவர்களுக்கு பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் இவ்வாறான செய்தி வெளிப்படுத்துகையை பொறுத்தவரை, இலங்கையில், ஊடகப்பொறிமுறை ஒன்று அவசியம் என்று கலன்சூரிய வலியுறுத்தியுள்ளார்.