யெமன் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

328 0

w-2140 பேரை பலி கொண்ட ளெதி கிளிர்ச்சியாளர்களின் வான்வழித் தாக்குதலை கண்டித்து யெமனில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அந்த பேரணியில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் சவுதி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, யெமனின் சனா பகுதியில் இறுதிச் சடங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் வான் வழித்தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கியநாடுகள் சபை தகவல் வெளியிட்டிருந்தது.

இதன்போது 140 பேர் வரையில் கொல்லப்பட்டதுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.

ஹெளதி போராளிகளுக்கு எதிராக யெமன் ஜனாதிபதி அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு சவுதி இராணுவத்தினர் யெமனில் தாக்குதல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.