மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான உப தபால் நிலையங்களை துரிதமாக ஏற்படுத்தி மக்களுக்கான சேவையினை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் மன்னார் தபால் நிலையம் பழைய கட்டிடம், வசதிகள் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றது. ஆகவே தபால் நிலைய கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.