இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலாப் பகுதிகள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்ததை அடத்து இந்தடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலின் வெளிவட்டப் பகுதியிலும், அனைத்து நுழை வாயில்களிலும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய நகர்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.