இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, புலம்பெயர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணையை நடத்தவுள்ளது.
இந்த விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் அடங்கிய விபரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துயருற்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் சரியான முன்னேற்றம் காண ஐ.நா மனித உரிமை பேரவையும் பன்னாட்டுச் சமூகமும் தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.