அரசியல் அமைப்பின் பிரகாரம் தற்போதைய அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டு வரை கவிழ்க்க முடியாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சூரியவௌ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டவுடன் அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது தவறான விடயம் என்பதை ஒன்றிணைந்த எதிர் கட்சியின் செயற்பாடுகள் மூலம் அறியமுடிந்துள்ளது.
இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்குள் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாக மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.