மின் துண்டிப்பு: மின்சார சபைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

292 0

மின் துண்டிப்பு தொடர்பிலான அறிக்கையை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைத் தொடர்பில், விசாரணைச் செய்வதற்காக, இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு, ​கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று (02) நோட்டீஸ் விடுத்தார். 

இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஒன்பது பேரே, நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல், இதுவரையிலும் மின் துண்டிப்பு மற்றும் வேறு காரணங்கள் சிலவற்றுக்கு அறிக்கை மற்றும் ஆவணங்களைக் கையளிக்குமாறு அந்த ஆணைக்குழு, மின்சார சபைக்கு அறிவுறுத்தியிருந்தது எனினும், அவை இதுவரையிலும் வழக்கப்படவில்லையென, ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

மேற்குறிப்பிட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை நீதிமன்றத்துக்கு அழைக்குமாறு விடுத்த கோரிக்கையை அடுத்தே, அவர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.