கனடாவில் தமிழர்கள் செய்யும் பணிகளுக்கு நன்றிக்கடனாக வருடத்தின் ஒவ்வொரு தை மாதத்தையும் தமிழர்களின் வரலாற்று மாதமாக கனடா பிரகடனம் செய்துள்ளது.
இந்த மாதத்தில் தமிழ் வரலாறு தொடர்பில் புதிய தலைமுறைக்கு விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த பிரகடனத்துக்கான யோசனையை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி இந்த வருட ஆரம்பத்தில் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
இதனையடுத்து விவாதங்கள், மே 20 மற்றும் செப்டம்பர் 29 ஆகிய தினங்களில் நடைபெற்றிருந்தன.
ஏற்கனவே தமிழர்களின் வரலாற்று மாதமாக தைமாதத்தை, கனடாவின் பல்வேறு மாநிலங்களும் பிரகனப்படுத்தியுள்ளன.
இந்தநிலையில் நேற்றைய வாக்கெடுப்பின்போது கெரி ஆனந்தசங்கரியின் யோசனைக்கு 283 பேர் ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.