அமெரிக்காவின் அதிரடியை தொடர்ந்து துருக்கி நாணய பெறுமதி வீழ்ச்சி

323 0

துருக்கி லிராவின் பெறுமதி 2 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

துருக்கிக்கு போர் விமானங்களை வழங்கும் செயற்பாட்டை நிறுத்துவதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.

இந்நிலையில், துருக்கியின் நாணய பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு துருக்கி ஒப்பந்தம் செய்தது.

ஆனால், ரஷ்யாவிடம் ஏவுகணைகளை கொள்வனவு செய்யக் கூடாது என அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், எச்சரிக்கையை மீறி துருக்கி ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் துருக்கிக்கு போர் விமானங்களை வழங்கும் செயற்பாட்டை அமெரிக்கா நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.