ரஷ்யாவிடமிருந்த 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை வாங்கும் சீனா

324 0

தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சீனா கருதுகிறது. இதை கவனத்தில் கொண்டு, ரஷியாவிடம் இருந்து சுகோய்-57 ரக போர் விமானங்களை வாங்க சீனா திட்டமிட்டுள்ளது.

ரஷ்யத் தயாரிப்பான சுகோய்-57 ரக போர் விமானம்தான், உலகிலேயே மிகவும் அதிநவீன போர் விமானம் என்று அந்நாட்டு ஜனாதிபதி புட்டீன்‍ தெரிவித்துள்ளார். 

இந்த போர் விமானத்தின் மூலம், வானில் எதிரி நாடுகளின் போர் விமானங்களுடன் சண்டையிடவும், தரையிலும், கடல்பகுதியிலும் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கவும் முடியும்.

இந்த போர் விமானங்களை சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்ய விரும்புவதாக அதை தயாரித்துள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ்டக் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவன அண்மையில் தெரிவித்திருந்தது.

சீனாவிடம் தற்போது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஜே-20 போர் விமானங்களும், ரஷ்ய தயாரிப்பு சுகோய்-35 ரக போர் விமானங்களும் உள்ளன. இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த விமானங்களை இந்தியா வாங்கினால், இந்தியாவின் விமானப்படை மேலும் வலுவடையும், இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதியே மேற்படி போர் விமானங்களை சீனா வாங் முடிவுசெய்துள்ளது.

சுகோய்-57 ரக போர் விமானங்களை 5ஆம் தலைமுறை எனவும் அழைப்பர்.