சீனாவில் மாஜி எம்.பி.,க்கு மரண தண்டனை

330 0

tamil_news_large_1624744_318_219சீனாவில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி.,க்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கின்காய் மற்றும் யுனான் மாகாண குழு தலைவராக பணியாற்றியவரும், முன்னாள் எம்.பி.,யுமான பாய் என்பெய்(70), எம்.பி.,யாக இருந்த போது பெருந்தொகையை லஞ்சமாகப் பெற்றார். மேலும் வருமானத்துக்கு அதிகமான அளவில் பெரும் சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.