பதுளை ரிதீமாலியத்த – ஊவாவத்தை மலைப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவல் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
தீயினால் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனந்தெரியாத நபர்களால் இந்த தீ மூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருகின்றனர்.