யாழில் சத்திரசிகிச்சையினால் கோமா நிலைக்குச் சென்ற பெண் உயிரிழப்பு

316 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண்ணொருவர் சிகிச்சை பயனின்றி  உயிரிழந்துள்ளார்.

மன்னார்- தட்சணாமருதமடு, பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (வயது-28) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தலையில் ஏற்பட்ட வலி காரணமாக திடீரென மயக்கமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை, மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அவரது  உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

ஆனாலும்  அப்பெண்ணை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்போது சிகிச்சையளித்த வைத்தியர்கள், அவரது தலையில் கட்டியொன்று இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.

பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சத்திர சிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டபோது, அப்பெண் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே குறித்த பெண்  நேற்று பிற்பகல் உயிரிழந்தாரெனவும் வைத்தியசாலைத் தரப்பு  அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர், கடந்த வருடம் (2018) செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்டவர் என்பதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.