2,706 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு – ஜே.வி.பி.

289 0

போதைபொருள் பாவனை மற்றும் கடத்தல் குற்றத்தில் 22,831 பேரும், விஷ போதைப்பொருள் விடயங்களுடன் தொடர்புபட்ட 10,589 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதும் 2,706 பேர் மட்டுமே புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ சபையில் சுட்டிக்காட்டினார். 
அத்துடன் போதைபொருள் விடயங்களுடன் தொடர்புபட்ட மிக அதிகமான தொகையினர் கைது செய்யப்படுகின்றனர் என்றால் அதே அளவில் மக்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது குறித்து அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.