அவ நம்பிக்கையுடன் கொள்கை திட்டங்களை வகுப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், இரண்டாம் வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி செய்த தவறுகைள திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரவு – செலவு திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை அடிப்படையாகக் கொண்டே பரந்துப்பட்ட கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.