அரசியல் கைதிகள் யாரும் இல்லை என கூறி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல் கைதிகள் யாரும் இல்லை என கூறி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள கூடாது என தாம் வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமைக்காக போராடியவர்களையே நாங்கள் அரசியல் கைதிகள் என அழைக்கின்றோம் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.