கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனை பார்வையிடுவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
அந்த வகையில் 1979ஆம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்டபோது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியிருந்தன.
இந்நிலையில் தற்போது நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால், நீரில் மூழ்கியிருந்த குறித்த விகாரையிலுள்ள புத்தர் சிலைகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
இதனை பார்வையிட பொதுமக்கள் பலர் வருகை தருவதோடு ஒளிப்படங்களையும் எடுத்துச்செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.