மதவேறுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் – பிரியங்கா காந்தி

294 0

ஒருவருடைய மதத்தைப்பற்றி கேள்வி எழுப்பாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என தேர்தல் பிரசாரத்தின் போது பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்த சுற்றுப் பயணத்தின் போது மாணவிகளையும் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ராகுல்காந்தி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரியங்கா அளித்த பதில் வருமாறு:-

ராகுல்காந்தியிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண்கிறேன். கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறார். என்னை பொருத்தவரை ராகுலின் யோசனை சரியானது தான். ஆனால் கட்சியில் உள்ள பலர் ராகுலின் இந்த முயற்சியை கண்டு பயப்படுகிறார்கள்.

தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த பிரியங்கா, ‘‘சுதந்திரத்துக்குப் பிறகு அரச குடும்பங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. பிரதமராக இருந்த எனது பாட்டி அதை விரும்பவில்லை. நாங்களும் எந்த சலுகைகளையும் விரும்பவில்லை

இந்த நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் சமமாக இருக்க வேண்டும். இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்தவரா என்று ஒருவருடைய மதத்தைப்பற்றி கேள்வி எழுப்பாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.

நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என்ற கேள்வியை முன்வைக்காத தலைமுறை உருவாக வேண்டும். உங்களுக்கு சமஉரிமை அளிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும். இவை என் கனவு.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.