இலங்கையில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதில், தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 3.5 மில்லியன் டொலர் ரூபாயை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஆட்கடத்தல் தொடர்பான தரவுகளைத் திரட்டுவது தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆட்கடத்தல் சம்பவங்களுக்கான தண்டனை பெற்றுக்கொடுப்பது, நீதி விசாரணையைப் பலப்படுத்துவது, ஆட்கடத்தல் பற்றிய தகவல்களைத் திரட்டுவது, ஆட்கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது ஆகிய நான்கு விடயங்களுக்கு இந்த நிதி செலவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.