சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் முன்னாள்,இந்நாள் பாதுகாப்பு செயலாளர்கள்!

331 0

chinaமுன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.சீனாவின் பெய்ஜிங்கில் 60 நாடுகள் பங்கேற்கும் ஏழாம் சியெங்ஸான் பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பாகவுள்ளது.

இந்த மாநாட்டில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை சீன பாதுகாப்புச் சங்கம் மற்றும் அந்நாட்டு சர்வதேச தந்திரோபாய ஆய்வு பிரிவு ஆகியன ஏற்பாடு செய்துள்ளன.பிராந்திய வலயத்தின் பாதுகாப்புச் சவால்கள், ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச தீவிரவாதத்தை இல்லாதொழித்தல் ஆகியனவற்றை கருத்திற் கொண்டு இம்முறை அமர்வுகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, சீன அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு தாம் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதாகவும் மாநாட்டின் பின்னர் சீனாவின் சில இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த பாதுகாப்பு மாநாட்டில் அரசாங்கத்தை தாம் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வேறு யாரெல்லாம் மாநாட்டில் பங்கேற்கின்றார்கள் என்பது பற்றி தமக்கு தெரியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.