வடமாகாண முதலமைச்சர் லண்டன் விஜயம்!

283 0

maxresdefault-10வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக எதிர்வரும் 14ம் திகதி லண்டன் பயணமாகவுள்ளார்.

லண்டனில் உள்ள கிங்ஸ்டன் நகர சபைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அபிவிருத்தி சார்ந்த செயற்திட்டம் ஒன்றை உள்வாங்குவதற்கு, இரட்டை அதிகாரம் தொடர்பில் அதை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்வரும் 18ம் திகதி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காகவே குறித்த பயணத்தினை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

இப்பயணத்தில் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் பிரதி அவைத்தலைவரான காலஞ்சென்ற அன்ரனி ஜெகநாதனும் செல்வதாக இருந்த நிலையில், அவரது மறைவின் காரணமாக தற்போது முதலமைச்சரும் பிரத்தியேக செயலாளரும் மற்றுமொரு மாகாணசபை உறுப்பினரும் பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.