முல்லைத்தீவில் இராணுவம் கோரும் காணி

678 0

The_Sri_Lanka_Army_Flag_And_Crest-300x179இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள  பல காணிகளை, இராணுவத்தின் பண்ணை மற்றும் இலவச கல்வி நிலையம் அமைப்பதற்காக என தெரிவிக்கப்பட்டு இராணுவத் தரப்பால் கோரப்பட்டுள்ளது.  விசுவமடு, புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, தேவிபுரம், சுதந்திரபுரம், வள்ளிபுனம், வேணாவில் முதலிய இறுதி யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களை இராணுவத்தினர் தமக்கு வழங்குமாறு முல்லைத்தீவு அரச அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதேவேளை குறித்த பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் பல பண்ணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக பண்ணை அமைப்பதற்கும் காணிகளை கோரியுள்ளனர். மக்களின் காணிகளை இராணுவத்தினரின் பண்ணை அமைக்க வழங்கக்கூடாது என்றும் ஏற்கனவே பண்ணை அமைக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை மீட்டுத் தரவேண்டும் என்றும் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் இறுதி யுத்தம் நடந்த குறித்த பகுதிகளில் பெரும் பகுதிகளில் இராணுவத்தினரின் முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளை விட்டும் இராணுவத்தினர் வெளியேற வேண்டிய நிலையில் புதிதாக காணிகளை கோரியுள்ளமை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதேவேளை இராணுவத்தினரின் இந்த கோரிக்கை குறித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் அடுத்த மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment