சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு

404 0

201610091857409964_pak-army-chief-visits-loc-after-surgical-strike_secvpfஇந்தியாவின் சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் கடந்த மாதம் 29-ம் தேதி சர்ஜிகல் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளில் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இருப்பினும் பாகிஸ்தான் இது சர்ஜிகல் தாக்குதல் அல்ல என்று தெரிவித்து வருகிறது.

இதனை தொடர்ந்து சில தினங்களாகவே இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ஹஜி பிர் பகுதியினை பார்வையிட்ட ஷெரீப் அந்நாட்டு படை வீரர்களிடம் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எல்லையில் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளதாக கூறினார்.