மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை

244 0

டுபாயில் வைத்து கைதான மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்த டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்றகப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.