நாடளாவிய ரீதியிலுள்ள 25 நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளனவென, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மாவட்டத்துக்கொரு நகரம் என்ற அடிப்படையில், மூன்றாண்டு காலத்துக்குள், சகல வசதிகளையும் கொண்டதாக, குறித்த நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படுமென, அவர் தெரிவித்தார்.
இரண்டாம் நிலை நகர அபிவிருத்திக்கென, ஆசிய அபிவிருத்தி வங்கி, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.