மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 7ஆம் நாள் நினைவேந்தல்

305 0

தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலின் 7ஆம் நாள் நிகழ்வு மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முணை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள குருந்தையடி முன்மாதிரி கிராமத்தில் நேற்று இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரின் நினைவாக 10 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி இந்திய இராணுவத்திற்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதி ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார்.

இந்நிலையில், அன்னை பூபதியின் 31ஆவது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாளான 19ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த நினைவு தினத்தை ஆரம்பித்து ஒவ்வொரு கிராமத்திலும் நினைவேந்தல் நடத்தி வருகின்றது.

அந்தவகையில் கட்சியின் செயற்பாட்டாளர் யோகன் தலைமையில் ஏழாவது நாள் நினைவேந்தல்; நேற்று மட்டு. மண்முணையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.