பயங்கரவாத தடை சட்டத்தைவிட எதிர்ப்பு சட்டம் அபாயமானது – வாசுதேவ

259 0

சாதாரண பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தீவிரவாதம் என அடையாளப்படுத்துகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாதத் தடை சட்டத்தை விட அபாயமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சாதாரண பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தீவிரவாதம் என அடையாளப்படுத்துகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாதத் தடை சட்டத்தை விட அபாயமானது.

இவ்வாறானதொரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என எண்ணுவதே அபாயகரமானது. ஏனெனில் அவசரகால நிலையொன்றின்போதே இவ்வாறானதொரு சட்டத்தை கொண்டுவர முடியும்.

இச்சட்டத்தின் மூலம் அவசரகால நிலையை சாதாரண சட்டமாக மாற்றுவதற்கான முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்களின் நீதிக்கான போராட்டங்கள், பிரசாரங்கள் அனைத்தையும் தீவிரவாதமாக அடையாளப்படுத்தி அவர்களை சிறைவைப்பதற்கான நடவடிக்கைகளே இதன்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.