முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தி குருகந்த ரஜமஹா விகாரையையும் ,பிரம்மாண்ட புத்தர்சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதன் காரணமாக குறித்து பிக்கு நீதி மன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
குறித்த சர்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்படவிருந்த நிலையில் பௌத்த பிக்கு சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த வழக்கின் ஒருதரப்பான பௌத்த பிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளதன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் மன்றில் தெரிவித்தார் .
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்புக்காக ஏப்ரல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் .