அரச நிர்வாக சேவையில் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா நிர்வாக சேவை சங்கத்தின் 36 ஆவது வருடாந்த மாநாடு இன்று நெலும் பொகுண கலையரங்கில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
இது தெடார்பில் அவர் மேலும் கூறியதாவது,
நிர்வாக சேவை அதிகாரிகளின் கொடுப்பனவு மாத்திரமின்றி அவர்களுக்கான மேலதிக பயிற்சிகள் , வீட்டு வசதி மற்றும் வாகனங்களை பெற்றுக்கொடுக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்த கலந்துரையாடலடகள் இடம்பெற்று வருகின்றது.
அதேபோன்று தற்போது நாட்டில் காணப்படும் மின்சார நெருக்கடி நிலைமைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் முழு தகவல்களுடனான விவாதமும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக சகல அரச நிறுவனங்களிலும் மின்சாரத்துக்கு பதிலாக மாற்று வழிமுறைகளை கையாளுவதற்கும் மின்சாரத்தை வீண்விரயத்தை கட்டுபடுத்தவதற்குமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
எதிவரும் ஏழு நாட்களுக்கு மின்சார பாவனை கடுப்படுத்தபடுமாக இருந்தால் பாரியளவில் மின்சாத்தை சேமித்து கொள்ள கூடியதாக இருக்கும் என்றார்.