போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மீட்டியாகொட, கிரலகஹ பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் வைத்தே போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் பதின்மூன்றும், 100 ரூபா நாணயத்தாள்கள் ஐம்பத்து மூன்றும், நாணயத்தாள் அச்சிடப் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகியவற்றை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.