பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 8 ஆவது ஆண்டாக இசைவேள்வி!

684 0

பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 8 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 16.03.2019 சனிக்கிழமை 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை  vigneux sur seine        பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.16.03.2019 சனிக்கிழமை மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 26.09.1992 இல் வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.மகேந்திரனின் சகோதரர் ஏற்றிவைத்தார்.

17.03.2019 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் – மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வும்  காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.இந்நிகழ்வில் மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை  23.06.2000 நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சாவடைந்த 2ஆம் லெப்.கானத்தரசி அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. போட்டிகள் முறையே வயலின், மிருதங்கம், குரலிசை தனி, குழு என நடைபெற்றன. அனைத்து போட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர்.

இம்முறையும் அனைத்துப்போட்டிகளும் பக்கவாத்தியங்கள் சகிதம் நடைபெற்றிருந்தன.இந்நிகழ்வுகளின் நடுவர்களாக, கலைச்சுடர் ஆறுமுகம் தில்லைநாயகத்தின் மகள் திருவாட்டி சந்திரகுமார் பாலசரஸ்வதி – இசைக்கலைமணி யாழ்.பல்கலைக்கழகம் சங்கீதகலாவித்தகர் – வடஇலங்கைச்சங்கீதசபை.திருவாட்டி றெஜினோல்ட் டிலக்சி MFA கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு) மன்னாரில் ஆசிரியராகவும் பின்னர் வவுனியா பிரதேச செயலகத்தில் கலாச்சார உத்தியோகத்தர்  (Cultural officer) ஆகவும் பணியாற்றியவர்.சுவிஸ் நாட்டில் இருந்த வருகைதந்த திரு.கார்த்திகேசு விவேகானந்தன் BA இசைக்கலைமணி மிருதங்கம் யாழ்.பல்கலைக்கழகம் வானொலி முன்னாள் இசைநிகழ்ச்சித் தயாரிப்பாளர், ஆசிரியர் – நுவ.பூண்டுலோயா மத்தியகல்லூரி, யாழ்.இணுவில் மத்தியகல்லூரி.ஆசிரியர் – கிருஸ்ணசாமி லதா இசைக்கலைமணி இராமநாதன் நுண்கலைக்கழகம் யாழ்ப்பாணம். கிளி.புனித பற்றிமா றோ.க.த.பாடசாலை, யாழ்.நெல்லியடி மத்தியகல்லூரி.ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.  


2018 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆகத் தெரிவுசெய்யப்பட்ட செல்வி எட்வேட் லூயிஸ் அனோஜினி அவர்களின் சிறப்பு ஆற்றுகையும் அனைவரின் கரகோசத்திற்கு மத்தியில் இடம்பெற்றது.தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் சார்பில் நன்றியுரைக்கப்பட்டது.தொடர்ந்து நடுவர்கள் பிரான்சு தமிழர்கலை பண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் திரு.கட்சன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களையும் போட்டியின் நடுவர்கள் மற்றும் கலைப்பிரிவு ஆசிரியர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கப்பட்டது.2019 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆக செல்வி சோதிராசா சோனா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசவார்த்தையின்றி; மேடையில் நின்றிருந்தார். அவரது பெற்றோரும்; மகிழ்ச்சியின் வெளிப்பாட்டைக் காட்டியிருந்தனர். செல்வி சோதிராசா சோனா அவர்கள் தனது வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார். நிகழ்வுகளின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடனும் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரகமந்திரத்துடனும் 2019 இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி இனிதே நிறைவடைந்தது.


இசைவேள்வி 2019 போட்டி முடிவுகள்:
இசைத்துளிர் – 2019செல்வி சோதிராசா சோனா
குரலிசை கீழ்ப்பிரிவு1ம் இடம்: சிறிதரன் அக்சரா2ம் இடம்: ஜீவராஜா ப்ரஹாசினி
குரலிசை  மத்தியபிரிவு1ம் இடம் : ஜீவராஜா ப்ரத்யங்கிரா2ம் இடம் : அன்ரன் லியோன் செருபா3ம் இடம் : கணபதிப்பிள்ளை கார்த்தி          சத்தியநாதன் அமலியா
குரலிசை மேற்பிரிவு1ம் இடம் : ஜான்சன் றெஜினா2ம் இடம் : தெவ்வேந்திரம் ஹரிஹரணி3ம் இடம் : பக்திவேல் மாலதி
குரலிசை – அதிமேற்பிரிவு1ம் இடம் : சிறிதரன் ஆரபி2ம் இடம் : மாட்டின் அசாந்தி3ம் இடம் : ஞானகிருஸ்ணன் கிரிசனா
குரலிசை – அதிஅதிமேற்பிரிவு1ம் இடம் : திலீப்குமார்  திசாணிகா2ம் இடம் : தர்மகுலசிங்கம் ஆரணி3ம் இடம் : கணேஸ்வரன் சுவீனா
வயலின்  மத்திய பிரிவு1ம் இடம் : பூங்காவனம் கேசவன்2ம் இடம் : அகிலன் ஆகாஸ்3ம் இடம் : சசிகரன் சௌமிகா
வயலின்  மேற்பிரிவு1ம் இடம் : ராம்குமார் ராகரன்2ம் இடம் : அகிலன் அஸ்வின்;3ம் இடம் : சசிகரன் ரித்திகா
வயலின் அதிமேற்பிரிவு1ம் இடம் : மயில்வாகனம் அபிராமி 2ம் இடம் : தேவன் அசிதன்3ம் இடம் : சிவானந்தராஜா குந்தவி         சிவராஜா மதுரா
மிருதங்கம் மத்தியபிரிவு1ம் இடம் : கணபதிப்பிள்ளை கார்த்தி2ம் இடம் : பரந்தாமன் கிசோர்
மிருதங்கம் மேற்பிரிவு1ம் இடம் : கணேசலிங்கம் துவாரகா2ம் இடம் : மகேந்திரம் பகிர்தன்;3ம் இடம் : முகுந்தகுமார் முகிலன்         நவரத்தினம் ராகுல்
மிருதங்கம் அதிமேற்பிரிவு 1ம் இடம் : புஸ்பகரன் அபினாஸ்2ம் இடம் : பகீரதன் ஆகாஸ்3ம் இடம் : முத்துத்தம்பி கணாதீபன்
மிருதங்கம் அதிஅதிமேற்பிரிவு 1ம் இடம் : புஸ்பகரன் அட்சயா2ம் இடம் : முகுந்தகுமார் மிதுலன்3ம் இடம் : பாலச்சந்திரன் தசிகரன்
வயலின் (குழு) கீழ்ப்பிரிவு1ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி2ம் இடம்; : லாக்கூர்னோவ் தமிழ்ப்பள்ளி
வயலின் (குழு) மேற்பிரிவு1ம் இடம் : லாக்கூர்னோவ் தமிழ்ப்பள்ளி2ம் இடம்; : சோதியா கலைக்கலூரி3ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளிகுரலிசை (குழு) கீழ்ப்பிரிவு1ம் இடம் : இசைக்கதம்பம்2ம் இடம்; : சோதியா கலைக்கல்லூரி3ம் இடம் : திரான்சி தமிழ்ப்பள்ளிகுரலிசை (குழு) மேற்பிரிவு1ம் இடம் : இசைக்கதம்பம்2ம் இடம்; : இசைக்கதம்பம்;3ம் இடம் : சோதியா கலைக் கல்லூரி
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு )