பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில், புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்கு, அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கின்றபோது, பெற்றோர் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கவனத்தில் கொண்டே, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.